Posts

தமிழ்விடு தூது

     தமிழ்விடு தூது தமிழ்விடு தூது என்ற நூல், மதுரையில் எழுந்தருளி உள்ள சோமசுந்தரக் கடவுளிடம் ஒரு பெண் தன் காதல் துன்பத்தைக் கூறித் தமிழ்மொழியைத் தூது அனுப்பியதாக அமைந்துள்ளது. இந்த நூலில் தூது பெறுவோர் கடவுள். அதாவது சோமசுந்தரக் கடவுள். தூது விடுவோர் ஒரு பெண். தூது செல்லும் பொருள் தமிழ்மொழி. இந்த நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது. இந்த நூலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. * தமிழ்மொழியின் பெருமை தூது அனுப்புவோர் தூதுப்பொருளிடம் அதன் பெருமைகளைக் கூறித் தூது செல்ல வேண்டுவதை, எல்லாத் தூது நூல்களிலும் காணலாம். இந்த நூலில் தூது விடும் தலைவி, தூதுப் பொருளான தமிழின் பல்வேறு பெருமைகளைப் புகழ்ந்து கூறுகின்றாள். * தமிழைப் புகழக் காரணம் சிவபெருமான், தடாதகைப் பிராட்டியார், விநாயகர், முருகன், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், அகத்தியர், தொல்காப்பியர், மெய்கண்ட தேவர், திருவிசைப்பாப்பாக்கள் பாடிய திருமாளிகைத் தேவர் முதலியவர்கள், திருமூலர், கபிலர், பரணர், நக்கீரர், ஐயடிகள் காடவர்கோன், கழறிற்றறிவார், திருவள்ளுவ நாயனார் முதலாகிய கல்வி, கேள்விகளில் சிறந்த எல்லா...

கோயில் அங்கங்கள்

 

நெடுநல்வாடை உரையுடன்

நெடுநல்வாடை   பாடியவர் :   மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் திணை :   வாகை துறை :   கூதிர்ப்பாசறை பாவகை :    அகவல்பா ( ஆசிரியப்பா )    மொத்த அடிகள் – 188   புலவர் :  கீரன் என்பது இப்புலவர் பெருமானின் இயற்பெயர் .   ந என்னும் சிறப்புப் பொருளைத்தரும் இடைச்சொல் சேர்த்து நக்கீரன் என்றாயிற்று . திருமுருகாற்றுப்படையை இயற்றியவரும் இவரே .   இவர் தந்தையார் மதுரையில் ஆசிரியராக இருந்தவர் .   பாட்டுடைத் தலைவன் :   பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச்                                                       செருவென்ற நெடுஞ்செழியன்     நெடுநல்வாடை :    இப்பெயர் ‘ நெடிய நல்ல வாடை ’ என்பதால் பண்புத...