தமிழ்விடு தூது

   தமிழ்விடு தூது

தமிழ்விடு தூது என்ற நூல், மதுரையில் எழுந்தருளி உள்ள சோமசுந்தரக் கடவுளிடம் ஒரு பெண் தன் காதல் துன்பத்தைக் கூறித் தமிழ்மொழியைத் தூது அனுப்பியதாக அமைந்துள்ளது.


இந்த நூலில் தூது பெறுவோர் கடவுள். அதாவது சோமசுந்தரக் கடவுள். தூது விடுவோர் ஒரு பெண். தூது செல்லும் பொருள் தமிழ்மொழி. இந்த நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது. இந்த நூலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை.


* தமிழ்மொழியின் பெருமை


தூது அனுப்புவோர் தூதுப்பொருளிடம் அதன் பெருமைகளைக் கூறித் தூது செல்ல வேண்டுவதை, எல்லாத் தூது நூல்களிலும் காணலாம். இந்த நூலில் தூது விடும் தலைவி, தூதுப் பொருளான தமிழின் பல்வேறு பெருமைகளைப் புகழ்ந்து கூறுகின்றாள்.


* தமிழைப் புகழக் காரணம்


சிவபெருமான், தடாதகைப் பிராட்டியார், விநாயகர், முருகன், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், அகத்தியர், தொல்காப்பியர், மெய்கண்ட தேவர், திருவிசைப்பாப்பாக்கள் பாடிய திருமாளிகைத் தேவர் முதலியவர்கள், திருமூலர், கபிலர், பரணர், நக்கீரர், ஐயடிகள் காடவர்கோன், கழறிற்றறிவார், திருவள்ளுவ நாயனார் முதலாகிய கல்வி, கேள்விகளில் சிறந்த எல்லாருமாய் நீ இருக்கின்றாய். ஆகவே, உன்னைக் கண்டு, உன் பொன் போன்ற அடிகளைப் புகல் இடமாகக் கொண்டு போற்றுகின்றேன் என்று, 

தலைவி முதலில் தமிழ்மொழியைப் போற்றக் காரணம் கூறுகின்றாள்.

தமிழ் விடு தூது  வழி தமிழின் பெருமை/சிறப்பு 


🪷சிறப்புப் பொருந்திய கூடலென்ற சிவராசதானியைக்காத்து அழகு 

பொருந்திய

 சங்கத்திற் புலவராயிருந்தவரும், 


🪷பல 

திசைகளிலுஞ் சென்று போர்புரிந்து 

வாய்ந்த தமிழரசி யென்று பலரும்

 வாழ்த்தித் துதிப்பத்திசைதோறும் தன் 

வெற்றியைத் தோற்றுவித்த 

பெண்ணரசியும்,


🪷விருப்பமுறும்படி திருத்தமான சிவஞானத் தொகுதியுடைய ஏட்டுச் சுவடிகளில்

ஓர் ஏட்டினைக் கையிலெடுத்தெறிந்த

 கணபதியும், (தந்தை சபித்ததை யுணர்ந்து தந்திமுகக்

கணபதி ஆகமச் சுவடிகளைத் துதிக்கையாலெடுத்துக் கடலில் வீசியெறிந்தனர் என்பதும் )


🪷உண்மையருளால்

மதுரையை அரசு புரிந்து ஒருகாலத்தில் 

மதுரைச் சங்கப் புலவரெதிரமர்ந்து

பாடலின் சிறப்பையுணர்த்திய 

வேற்படையுடைய முருகக்கடவுளும், முருகக்கடவுள் முன் தாடதகையின் புதல்வன் உக்கிரகுமாரபாண்டியனாக வந்து மதுரையை யாண்டு பின்னர் உப்பூர் கிழார் மகன் ஊமை உருத்திரசன்மனாக வந்து இறையனாரகப் பொருளுரைகளுள் நல்லுரை யுணர்த்தினன் 


🪷மனையை விட்டு நீங்காத இளமைவாய்ந்த மூன்றாண்டுப் பருவத்தின் வடமொழி 

நூல்களும் தென்மொழி நூல்களும்

 தாயாகிய உமையம்மையா ரூட்டிய 

ஞானத்தோடு கலந்த 

முலைப்பாலானறிந்த திருஞானசம்பந்தரும், 


🪷மூன்றாண்டுக்கு முன்னர் முதலையுண்ட 

பிள்ளையை மூன்று விழியார்முன் 

கவிபாடிப் பின்பெற்றுத் தரும்படி 

தமிழாலுரைத்த சுந்தரரும், 


🪷பிரமனும் 

திருமாலுந் தோன்றும்படி தேடியும் 

அறியமுடியாத சிவபெருமான் 

திருவடியைத் திரு நல்லூரிற் 

செய்யுள்பாடித் தம் முடியாகப் பெற்றுக் கொண்டவரும், ஆய்ந்து தம் முடியில் மணமுள்ள 

தாழம்பூவைச் சூடாதவராகிய 

சிவபெருமான் ஓலையை வாரிச் சேர்த்துத் தம் பட்டோலையில் எழுதிக் கொள்ளுமாறு செய்யுள் பகர்ந்தவரும்.


🪷தடைபடாமல் குறையாத பெருமைத் தமிழ் மூன்றினையும்

ஓதிய பெரிய முனிவனும், 


🪷தொல்காப்பியம் என்ற இலக்கணத்தைக் கூறிய

பழைய முனிவனும், 


🪷குறையாத சொல்லமைந்த பாவின் நிலைமையைக்

கொண்டு முதல்வன்பாற் செல்லும் உயிர்களை (அவற்றின் இயலை)

பன்னிரண்டு நூற்பாவைக் கொண்டு முடித்த தூய்மையுடையவரும், 


🪷இருவிழிகளாகிய குற்றமில்லாத கவிதை பாடும் திருமாளிகைத் தேவர் முதலிய முனிவர் யாவரும்,


🪷 குலத்தாலும் உற்ற சூழ்ச்சியாலும் நீங்காத உயிர்களைச் சாரும் வினைகளையெல்லாம் தாம் சாற்றிய மந்திரம் என்ற நூலினால் நீக்கிய வல்லவரும், 


🪷செந்தமிழிற் பொய்யடிமையில்லாத புலவரென்று புலவர்களாற் புகழ்ந்து கூறப்பட்ட உண்மைத் தொண்டராகிய சங்கப் புலவர்களும், ஐயடிகள் காடவர்கோன் என்பவரும், 


🪷 பாடுவதற்கு அருமையான தெய்வமொழிப் பாவலரும்


🪷சங்கத்திருந்தோர் முதலாகத்

தெய்வப் பாவலர் இறுதியாகக் கல்வி கேள்விக்குரியவர் எல்லாரும்

நீயாயிருந்தமையால் எனத் தமிழ்மொழியை உயர்த்தினர் தமிழேயுருவமாக

இருந்தனர் எல்லாரும்; நீ வேறு அவர்கள் வேறாக எண்ணற்க

இடனில்லை 


என்று தமிழ் மொழியின் சிறப்பினை எடுத்துரைத்துத் தூது செல்லுமாறு கூறுகிறாள் தலைவி 



Comments

Popular posts from this blog

வில்லிபாரதம் : மற்போர் சருக்கம் _ வில்லிபுத்தூரர்

கம்பராமாயணம்